Breaking
Sat. Nov 23rd, 2024

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட தி/கிண்/ அல்மினா மகாவித்தியாலயத்துக்கான புதிய இரு மாடிக் கட்டிடத்தை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்  (27) உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்தார்.

பாடசாலை அதிபர் ஏ.சீ.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்ற குறித்த கட்டிடம் பிரதியமைச்சரினால் திறந்து மாணவர்களின் பாவனைக்கு விடப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் PSD திட்டத்தின்  கீழ்  உள்ள  நிதி ஒதுக்கீட்டில் சுமார் 95 இலட்சம் ரூபா செலவில்  பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில்  குறித்த கட்டிடம் அமைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன்பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்கள்  மற்றும் ஆசிரியர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்

Related Post