Breaking
Tue. Nov 19th, 2024
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடலில் இன்று (08) வல்லம் குடை சாய்ந்ததில் ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது அதிகாலையில் வெள்ளம் காரணமாக தங்களது விவசாய செய்கைக்காக வல்லத்தில் சென்ற வேலையில் வல்லம் குடை சாய்ந்ததில் ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  இருவர் காப்பாற்றப்பட்டு கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 தற்போது மீட்புப் பணியில் கடற்படையினருடன் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 இவ்வாறு உயிரிழந்தவர் சலாமன் நகர்,புல்மோட்டை-02 எனும் முகவரியை  சேர்ந்த வயது (19) இக்பால் இல்ஹான் எனவும் தெரியவருகிறது.
 இதில் பெருந்தெரு,கிண்ணியா-05 எனும் முகவரியை சேர்ந்த முஹம்மது ஆதிர் வயது (19) கிண்ணியா தளவைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கிண்ணியா ஆலங்கேணியை சேர்ந்த சரவணமுத்து கஜேந்திரன் வயது (31) கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரான கிண்ணியா மஃறூப் நகர்,மாஞ்சோலையை  சேர்ந்த சஹீப் வயது (29), முஹம்மது காமின் வயது (39) ஆகிய இருவரையும் காணவில்லை எனவும் இவ்வாறு காணாமல் போனவர்களை மீட்புப் பணியில் படையினர்கள் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகிறத
 இச் சம்பவம் தொடர்பில் உரிய இடத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் சென்று விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளதோடு ஏனைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உரிய பொலிஸ் உயரதிகாரியை பணித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post