குறித்த நிகழ்வானது நேற்று (24) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் வர்த்தக வாணிப கைத்தொழில் ,நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,கூட்டுறவு திறன் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது
சுமார் 230 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள இப் பல்கலைக்கழக கல்லூரி பிரதியமைச்சரின் நீண்ட கால முயற்சியின் பலனாக தற்போது இது நிறைவேறியுள்ளது. இதனால் திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகள் மட்டுமல்லாது ஏனைய பிரதேச யுவதிகளும் பல்வேறு அரச அங்கீகாரம் பெற்ற பாடநெறிகளை பயில்வதன் ஊடாக சிறந்ததொரு தொழில்வாண்மை கல்வி சமூகத்தை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக் குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா,அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.