Breaking
Sat. Nov 23rd, 2024

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா அல் அக்லா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது  (27) புதன் கிழமை பாடசாலை அதிபர் கே.பிர்தௌஸ் தலைமையில் இடம் பெற்ற இவ் விழாவில்  பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் கலந்து கொண்டார்.

பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்களால் இசை வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பாடசாலை மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கும் பிரதியமைசுசரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
போட்டோ கொப்பி இயந்திரம் என்பனவும் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தன விளையாட்டு நிகழ்ச்சிகள், அணிநடை வகுப்புக்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றன போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பரிசில்களூம் பிரதியமைச்சரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ் நிகழ்வுக்கு பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா வலயக் கல்வி உடற்கல்வி பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் அக்பர் உட்பட ஆசிரியர்கள், பெற்றார்கள் என பலரூள் கலந்து சிறப்பித்தார்கள்.

Related Post