கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை இடம் பெற்றது.
கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் மீள்குடியேற்ற செயலணி திட்ட அலகு ஊடாக ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா செலவில் இவ் வீதி மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று (25) புதன் கிழமை இருள் சூழ்ந்த பிரதேசங்களுக்கு பொறுத்தப்பட்டன.
பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்கள் கலந்து கொண்டு LED மின் விளக்குகளை பொருத்துவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.
கடந்த காலங்களில் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவும் பொதுமக்கள் இது விடயமாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியமை தொடர்பிலும் அப்பகுதி வட்டார உறுப்பினர் நிஸார்தீன் அவர்களால் இருளில் மூழ்கிய பிரதேசங்களுக்கு வெளிச்சமூட்டப்பட்டன.