திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை தி/கிண்ணியா பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தின் சுற்றுமதில் மற்றும் பாடசாலை கொங்ரீட் வீதி என்பன இன்று (31) துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹரூப் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இருபது இலட்சம் ரூபா செலவில் குறித்த வீதி,பாடசாலைக்கான சுற்றுமதில் என்பன திறந்து வைக்கப்பட்டதுடன் மேலதிகமாக போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளும்,பயிற்றுவித்த ஆசிரியர் ஆசிரியைகளும் பரிசில்களும் சான்றிதழும் வழங்கி இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.
பாடசாலை மாணவர்களால் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹரூப் அவர்களை அமோக வரவேற்பளித்தனர். பாடசாலை அதிபர் ஏ.ஆர்.சாதிக்கீன் அவர்களால் பிரதியமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதில் உரையாற்றிய பிரதியமைச்சர்
கல்விக்காக அதிக நிதியை எனது நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளேன் கிண்ணியா வலயத்தில் அதிகூடிய நிதியை ஒதுக்கி கல்வியை முன்னேற்றமடைய வைப்பதற்கான நோக்காகக் கொண்ட திட்டங்களை அமுல்படுத்துவதற்கான ஒரு அங்கமாகவும் விளங்குகிறது. எதிர்காலங்களிலும் பாடசாலை கல்விக்கான குறைபாடுகளை தீர்த்து வைத்து நடவடிக்கைகளை எடுப்பதுடன் சிறந்த கல்விச் சமுதாயத்தை உருவாக்க தனது பங்களிப்பு தொடரும் என்றார்.
இவ் வைபவத்தில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா ,தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான ஆர்.ரெஜீன்,தாலிப் அலி, கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி. முனவ்வரா நளீம், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.