Breaking
Wed. Mar 19th, 2025

கிண்ணியா நிஷா பாலர் பாடசாலையின் 20வது வருட கலை கலாசார நிகழ்வு, கிண்ணியா எகுத்தர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் (25) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாகடர்.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

ஆசிரியை திருமதி. நிஷா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் டாக்டர். பி. சதீஷ்குமார், என்.எம்.சமீம் (ECCD), எம்.ஏ.ஹாசன் (ADE) மற்றும் அதிபர் றூமி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் அல்/ சதானியா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை கலாசார நிகழ்வு, ஆசிரியை திருமதி.பரீனா தலைமையில், முள்ளிபொத்தானை, புஹாரி வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விலும் டாகடர்.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post