கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (18) கிண்ணியா நகர சபை ரெஸ்ட் விடுதியில் இடம் பெற்ற இச் சந்திப்பில் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படவிருக்கும் ஆசிரியர்கள் நியமனங்களை கிண்ணியா வலயத்திலும் உள்வாங்கி ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கல்வி தொடர்பான முன்னேற்றத் திட்டங்களை நடை முறைப்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டது
இது விடயமாக மேலதிகமாக நாளை (19) திங்கட் கிழமை காலை 09.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்,மாகாண கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கிண்ணியா கல்வியின் முன்னேற்ற பாதையில் எங்களது பங்களிப்பும் என்ற்மே கிடைக்கும் இதற்காக பல நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளோம் தற்போதும் செய்து வருகிறோம் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலை வளப்பற்றாக்குறை தீர்வுகள் மிக விரைவாக கிட்டும் இதில் எனது பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்றார்.
இக் குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்,கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.சனூஸ்,பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம்.முனவ்வரா நளீம்,கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி உள்ளிட்ட அதிபர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
5 Attachments