Breaking
Sat. Jan 4th, 2025
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு பொதுபல சேனா  ஆதரவு வழங்கினால், நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகிடுவேன் என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக தனது நிலைப்பாட்டை பொது பலசேனா இன்னமும் தெளிவாக அறிவிக்கவில்லை. அவ்வாறு பொதுபலசேனா  நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினால் நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகிடுவேன். கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலின் போது நான் தலையிட்டதால் மற்றுமொரு கறுப்பு ஜூலையைதடுக்க முடிந்தது. எனவே இதனை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Related Post