கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.கண்ணன், திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகதீஸ்வரன், எஸ்.நித்தியானந்தன், எஸ்.மகேந்திரன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறுபத்தி ஒரு பேருக்கு கச்சான், எண்பத்தி ஒரு பேருக்கு சோளம், பத்தொன்பது பேருக்கு எண்னை அடிக்கும் கருவி, நாற்பத்தி மூன்று பேருக்கு பன்னிரண்டு வீதம் தகரம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.