Breaking
Sun. Dec 22nd, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 31.01.2017 ஆம் திகதி மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் ஜதிஸ்குமார் பனை அபிவிருத்தி சபை அதிகாரி விஜயன், மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்

16388388_1353069838088038_4845057975504434779_n

By

Related Post