Breaking
Sun. Dec 22nd, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு காரியாலயம் இன்று 27.02.2017 ஆம் திகதி புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இக் கட்டிடத் திறப்பு விழா அமைச்சின் செயலாளர் திருமதி ரேனுகா ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹர்ஸன், பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

பிரதி அமைச்சர் உரையாற்றுகையில்

கடந்த காலத்தில் மூன்று இடங்களில் இயங்கி வந்த அமைச்சின் காரியாலயங்கள் இன்று ஓர் இடத்தில் அமையப் பெற்றுள்ளது இதன் மூலம் நிர்வாக விடயங்களை இலகுவாக மேற்கொள்வதற்கு வசதியாக அமையும் என்று பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

பலசிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வந்த அமைச்சு இன்று ஓர் இடத்தில் இயங்குவதன் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சின் காரியாலய திறப்பு விழாவில் நிதி அமைச்சர் ரவிகருணா நாயக்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்த்தன, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

IMG-20170227-WA0008 IMG-20170227-WA0009 IMG-20170227-WA0013

By

Related Post