Breaking
Mon. Dec 23rd, 2024

கிராம உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சைகள் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 858 மத்திய நிலையங்கள் ஊடாக இந்தப் போட்டி பரீட்சை நடைபெறவுள்ளதோடு இதில் 109021 பேர் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது இதற்கான அனுமதியட்டைகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.என்.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்பாக அனுமதியட்டைகள் கிடைக்காதவர்கள் 1911 அல்லது 0112 785230, 0112 177 075 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்ப கொள்ளுமாறும் ஆணையாளர் பரீட்சார்த்திகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By

Related Post