Breaking
Mon. Dec 23rd, 2024

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டை எதிர்வரும் திங்கட்கிழமை தபாலில் சேர்க்கப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சை நாடு முழுவதிலும் 856 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. 01 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்தப் போட்டிப் பரீட்சையில் பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்கு முன்னர் இவர்களை சேவையில் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக நாடு முழுவதிலும் 1200 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் உண்டு.

By

Related Post