Breaking
Sat. Jan 11th, 2025
ஏ.எச்.எம் பூமுதீன்
கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும்  தனது கட்சி உறுப்பினர்கள் மூவரையும் சுயேற்சையாக செயற்படுமாறு அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அதிரடியாக பணித்துள்ளார்.
இன்று முதல் செயற்படும் வகையில் இந்த பணிப்புரையை அமைச்சர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ் அமீர் அலி , எம்.எஸ். சுபைர் மற்றும் ஷிப்லி பாறுக் ஆகிய மூவரும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பணிப்புரையை ஏற்று இன்று முதல் சுயேற்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் விடுத்துள்ள மற்றுமொரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மேற்படி மூவரும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் அ.இ.ம.கா சார்பாகவே ஐ.ம.சூ.கூட்டமைப்பில் போட்டியிட்டனர்.
ஐ.ம.சூ.கூட்டமைக்கும் – அ.இ.ம.க வுக்குமிடையிலான அன்றைய தேர்தல் ஒப்பந்தத்தின் படி எந்த வேளையிலும் நாம் தனித்து செயற்படுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தோம்.
அதற்கiமையவே இந்த தீர்மானத்தை கட்சித் தலைமை மேற்கொண்டுள்ளது.
மேற்படி மூவரும் கட்சித் தலைவரான அமைச்சர் ரிசாத் பதீயுதீனின் பணிப்புரைக்கு அமையவே ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பிலிருந்து விலகி சுயேற்சையாக அ.இ.ம.க தனி அமைப்பாக செயற்படுகின்றார்களே ஒழியே ,அவர்கள் அ.இ.ம.கா வை விட்டு விலகவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என செயலாளர் நாயம் வை.எல்.எஸ் ஹமீட் குறிப்பிட்டுள்ளார்.
அன்;று போல் இன்றும் இனி என்றும் மேற்படி மூவரும் அ.இ.ம.கா வுடனும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடனும் இணைந்தே உள்ளனர் என்;றும் எமது முடிவை திருவுபடுத்த முற்படுவோருக்கு குறிப்பிட்டு காட்ட விரும்புகின்றோம்.
இது தொடர்பில் வை.எல்.எஸ் ஹமீட் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நேற்றிரவு இடம்பெற்ற கட்சியின் அதியுயர் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தின் படியே மேற்படி மூவரும் கிழக்கு மாகாண சபையில் தனித்து செயற்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
நேற்றைய கூட்டத்தின் தீர்மானத்தின் படி , கிழக்கு மாகாண சபையில் இடம்பெறும் நிர்வாக சீர்கேடு, முஸ்லிம்களின் காணி அபகரிப்பு, முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக கடந்த இரு வருடங்களாக இடம்பெற்று வரும் அடக்குமுறை ஒடுக்குதல் மற்றும் அரசாங்கம் கிழக்கு மாகாண சபையின் போது தந்த வாக்குறிதிகள் நிறைவேற்றப்படாமை போன்றவை தொடர்பில் முஸ்லிம் சமுகத்தில் ஏற்பட்டுள்ள மனோநிலையை கருத்திற்கொண்டே மேற்படி மூவரும் சுயேற்சையாக இயங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் சுட்டிக் காட்டினார்.
அ.இ.ம.கா வின் நேற்றைய முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயும் பொருட்டு , கட்சியின் உயர்பீட கூட்டத்தை எதிர்வரும் 29ம் திகதி கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு அ.இ.ம.கா வின் நாடு பூராகவுமுள்ள பிரதேச, நகர , மாநகர, மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சில முக்கிய எடுப்பது என்றும் தீPர்மானிக்கப்பட்டது.
அதனோடு சமுக ரீதியாக சிந்தித்து செயற்படும் உலமாக்கள் ,சமுகப்பெரியவர்கள், கல்விமான்களையும் அழைத்து அவர்களது ஆலோசனை பெற்றுக்கொள்ளவும் நேற்றைய கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டதாக வை.எல்.எஸ் ஹமீட் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related Post