Breaking
Mon. Dec 23rd, 2024

கிழக்குப் பல்கலைக்கழக 2013/2014ம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதலாம் வருட புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 27.04.2015ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைகழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் ரி.பாஸ்கரன் தெரிவித்தார்.

கலை கலாசார பீடம், விவசாய பீடம், வர்த்தக முகாமைத்துவப் பீடம், விஞ்ஞானப் பீடம் போன்ற மேற்படி பீடங்களைச் சேர்ந்த சகல மாணவர்களும் 26.04.2015 அன்று பிற்பகல் 05.00 மணிக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்திற்கு சமுகமளிக்குமாறு சிரேஸ்ட உதவிப் பதிவாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகம் (பொது) 065-2240490, உதவி பதிவாளர்மாணவர் நலன்புரிச்சேவைகள் 065-2240731

Related Post