Breaking
Sat. Jan 11th, 2025

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே நேற்று மாலை இந்த மோதல் சம்பவம் பதிவாகியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மோதலில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post