கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவிவரும் கடுமையான வரட்சி காரணமாக சுமார் 2,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 1,25,000 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 68,000 பேரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 26,000 பேரும் இவ்வரட்சி காரணமாக நோரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்கடுமையான வரட்சி காரணமாக அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இங்குள்ள நிர் நிலைகளும் வற்றியுள்ளது. குடி நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
வரட்சி காரணமாக சிறுபோக அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள் எதிர்பார்த்த நெல் விளைச்சலும் கிடைக்கவிலலை.
பி. ஜி. 94-1 எனும் சிவப்பு நெல்லினத்தை விதைத்த விவசாயிகளுக்கு குறைந்த அறுவடை கிடைத்துள்ளது. குறித்த நெல்லினத்தை கடந்த காலங்களில் விதைத்த விவசாயிகள் கூடிய விளைச்சலைப் பெற்ற போதும் இம்முறை வரட்சி காரணமாக குறைந்த விளைச்சலைப் பெற்றுள்ளனர்.
-Thinakaran-