Breaking
Sat. Dec 21st, 2024

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொன்டமான் மற்றும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான MSS.அமீர் அலி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் (04) ஆளுநர் அலலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கணித, விஞ்ஞானப் பிரிவில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பாடசாலையில் காணப்படும் பௌதீக வளப்பற்றாக்குறை குறித்து தவிசாளர் அமீர் அலி எடுத்துரைத்தார்.

பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர், கூடிய விரைவில் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

மேற்படி சந்திப்பில், பாடசாலையின் அதிபர் A.J.மர்சூக் SLEAS, கோ.ப.மத்தி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் அதிகாரி H.M.M.றுவைத், கோ.ப.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் K.B.S.ஹமீட் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் பங்கேற்பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post