Breaking
Sat. Dec 13th, 2025

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்த சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அம்பாறை மாவட்ட கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் மும்மொழி பாடசாலையின் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் விளக்கினார். அதன் முதற்கட்டமாக சம்மாந்துறையில் மும்மொழி பாடசாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சம்மதத்தை கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்து இருக்கின்றார்.

அதே போன்று அம்பாறை மாவட்டத்தில் சுகாதாரம்,விளையாட்டு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிவதற்கான விஜயம் ஒன்றினை தான் மேற்கொண்டு, தான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Related Post