Breaking
Wed. Mar 19th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் கிழக்கு மாகாணத்திலுள்ள 1119 பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனங்கள்  திருகோணமலையில் இன்று (25/11/2017) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் காங்கிரஸின் பா.உ  அப்துல்லா மஹ்ரூப்,

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தோற்றிய அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குமாறும், 35 தொடக்கம் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கான நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் மற்றும்  தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களையும் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் ஆளுனரை வேண்டிக்கொண்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கல்விமான்கள்  மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

Related Post