Breaking
Mon. Dec 23rd, 2024

கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடு, சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று (7) நடைபெற்றது.

இதன்போது,  உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில்

முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தல். நிலைமாறு கால புனரமைப்பு செயற்பாட்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்பான விடயம், எதிர்கால தேசிய வேலைத்திட்டங்களில் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய அவசியம் போன்றவை ஆராயப்பட்டு வலியுறுத்தப்பட்டன.

இதேவேளை, எக்காரணத்துக்காகவும் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்கக்கூடாது என்ற பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரகடனம், இலங்கை அரசாங்கத்துக்கும்  சர்வதேச சமூகத்துக்கும், முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும். மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சிவில் சமூகத்துக்கும்; அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில், சம்மேளத்தின் செயலாளர் பொறியலாளர் எம்.எம்.எம்.நளீம், பொருளாளர் எம்.ஏ.ஜி.எம்.சபீர்  உட்பட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமூகப் பெரியார்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல பிரிவுசார் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

By

Related Post