Breaking
Fri. Nov 15th, 2024

சுதந்திரக் கூட்டணியின் மே தின கூட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறுமுகம் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரபா கணேசன் ஆகியோர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடினர்.

ஏ எல் எம் அதாவுள்ள தலைமையில் முஸ்லிம் தேசிய காங்கிரைசைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜே எம் வசீர், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆரியவங்ச திசாநாயக்க, புதிய சிஹல உறுமயவைப் பிரதிநிதித்துவப்படுத்தி சரத் மனமேந்திர, தொழில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏ எஸ் பி லியனகே, லிபரல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கமல் நிசங்க, ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பி எச் எஸ் அஜன்த ஆகியோர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சுதந்திரக் கூட்டணியின் மே தினக்கூட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிர்கால செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக இதன்போது கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் வடக்கு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளதுடன், அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டங்களுக்காக அம்மக்களின் ஒத்துழைப்பு கிடைக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

மேலும் சுதந்திரக் கூட்டணியின் மே தினக் கூட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒத்துழைப்புகளை வழங்குமென ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கா, ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டணியின் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By

Related Post