Breaking
Mon. Dec 23rd, 2024

– க.கிஷாந்தன் –

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நிலம் கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவிற்கும் நானுஓயாவிற்கும் இடையில் 2 வெவ்வேறு இடங்களில் பாதையின் ஒருப்பகுதி கீழ் இறங்கியுள்ளது.
சுமார் 5 மீற்றர் தூரமான வீதி கீழ்றங்கியுள்ளதால் இரு வழி பாதையான இதில் இந்த பகுதியில் ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்கக் கூடியதாக உள்ளது.

கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் பெய்த கடும் மழையை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளமான பகுதியில் வீதி கீழ்றங்கியுள்ளதால் இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும் படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

DSC00988

DSC00983

DSC00982

DSC00991

By

Related Post