Breaking
Thu. Jan 9th, 2025

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை ,குச்சவெளி,நிலாவெளி ஆகிய பகுதிகளில் இன்று புதிய வீதிகள் மற்றும் வடிகான் வசதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டு கையளிக்கப்பட்டது.

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் ஏற்பாட்டில் இவ் அபிவிருத்தி நிகழ்வுகள் யாவும் இடம் பெற்றன.

புல்மோட்டை மையவாடி கொங்ரீட் வீதி, ரஹ்மான் நகர் வடிகான், நாவலடி வடிகான் உட்பட குச்சவெளி ஜாயா நகர் கொங்ரீட் வீதி, இக்பால் நகர் புதுக் குடியிருப்பு வீதி வடிகான், இறக்கக் கண்டி பாடசாலை கொங்ரீட் வீதி, நிலாவெளி கோபால புரம், நிலாவெளி அடம்போடை கொங்ரீட் வீதிகள் என்பனவே இவ்வாறு மக்கள் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டது.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.குறித்த நிகழ்வுகளில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா,கிண்ணியா நகர சபை உறுப்பினர் கௌரவ நிஸார்தீன் முஹம்மட், முன்னால் குச்சவெளி பிரதேச சபை தவிசாளரும் முன்பள்ளி பாலர் பாடசாலை திருகோணமலை மாவட்ட பணிப்பாளரூமான ஆதம்பாவா தௌபீக், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உட்பட குச்சவெளி பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், வட்டார வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Related Post