குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 605 வாகனச் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவருட கொண்டாட்டங்களின் போது எது வித அசம்பாவிதங்களும் ஏற்படாமலிருக்கும் படி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 291 மோட்டார் வாகனச் சாரதிகளும், 240 ஓட்டோ வாகன சாரதிகளும், 24 கார் சாரதிகளும், 20 லொறி சாரதிகளும்,08 வான் சாரதிகளும் உள்ளடங்குகின்றனர். அவற்றுள் 04 தனியார் சேவை பஸ் சாரதிகளும், இலங்கை போக்குவரத்து சேவையைச் சார்ந்த பஸ் சாரதியும் ஒருவரும் உள்ளடங்குகிறார்கள் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
13 ஆம் திகதி காலை 06 மணியிலிருந்து நேற்று (14) காலை 06 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கூடுதலாக மோட்டார் வாகன சாரதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடருமெனவும் பொலிஸ் அதிகாரிகள் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.