‘குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்’ என்ற தொனிப்பொருளின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆட்பதிவுத்திணைக்களத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் ஊடக பிரிவின் பொதுநிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு, சுகாதார அமைச்சு, இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொழும்பு நகரசபை,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன ஒன்றினைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முப்படையினர், கொழும்பு நகரசபை, அரச நிறுவனங்கள் என்பன சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன. இன்று டெங்கு நோயின் தாக்கம் அரசியல் மேடைகளிலும் பேசப்படுவதாகவும் டெங்கு நுளம்பு உருவாக்கத்திற்கு நமது சூழலும் காரணம் என உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.