Breaking
Sun. Dec 22nd, 2024

– ஏ.எஸ்.எம்.ஜாவித் –

முஸ்லிம் சமுகத்தினை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளுக்கு அமைச்சர் றிஷாதின் தொலைக்காட்சி மோதல் முஸ்லிம் சமுகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே மக்களால் நோக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் இரவு ஆனந்த தேரர் வில்பத்து விவகாரம் தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீனை வீண் வம்புக்கு இழுத்து தகுந்த ஆதாரங்களுடன் அவர் கொடுத்த பதிலடிகள் குரங்கு ஆப்பிழுத்த கதையாக ஆனந்த தேரரை திக்குமுக்காட வைத்ததையும் தெனைத் தாங்கிக் கொள்ள முடியாத தேராத் இனவாதக் கருத்துக்களையும், றிஷாதின் குடும்பங்களையும் இழுத்து சம்பவத்தை திசைதிருப்ப எடுத்த முயற்சியை முழுச் சமுகமும் கண்டு குதுகளித்தமை இனியும் இவ்வாறான ஒரு பொய்ப்பிரச்சாரங்களுக்கு வர அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியது முழு முஸ்லிம் சமுகத்திற்கும் கிடைத்த ஒரு வெற்றியா அமைந்துள்ளதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அமைச்சர் றிஷாத் வில்பத்து விவகாரத்தை தனக்கெதிரா உள்ளதென்று பாராது வடபுல பாதிக்கப்பட்ட முழு முஸ்லிம்களினதும் கால் நூற்றாண்டுப் பிரச்சினையாக கருதி அல்லாஹ்வை தவக்கல் வைத்தவரா துணிச்சலுடன் முகங் கொடுத்தமை முஸ்லிம் சமுகத்தினை மனநெகிழ வைத்துள்ளது.

இந்த நாட்டில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளும், முஸ்லிம் அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் இருந்தும் கால்நூற்றாண்டு காலமாக துன்பப்படும் துன்பப்படும் மக்களின் நிலைமைகளைக் கண்டு ஒரு அறிக்கை கூட விடாத அமைப்புக்கள் தமது சமுகத்திற்காக இனி என்ன செய்யப்போகின்றார்கள்.

சமுகத்திற்கு என ஒரு பிரச்சினை வரும்போதுதான் ஒன்றுபட வேண்டும் ஆனால் அமைச்சர் றிஷாதின் பிரச்சினை அவர் பட்டுச்சாவட்டும் என்று என்னிக் கொண்டு வடபுல முஸ்லிம்களுக்கு துரோகம் இழைப்பவர்களாகவே காணப்படுகின்றனர். அரசினதும், ஏனைய சுகபோகங்களுக்கும் அடிபணிந்து கொண்டிருப்பவர்கள் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு வடபுல முஸ்லிம்களுக்கு என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள்.

முஸ்லிம் தலைமைகளே, முஸ்லிம் சமய அமைப்புக்களே, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவே முஸ்லிம்கள் என்று பொய் வேஷம் போட வேண்டாம். கண்ணீர் விடும் மக்களின் விடயத்தில் கொஞ்சம் திரும்புங்கள், சமுகத்தினைப் பாருங்கள், அவர்களின் தேவைகள் அவர்கள் இனவாதிகளால் நசுக்கப்படும் விடயங்களைப் பாருங்கள்.

அவர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்குவாரங்களைப் பாருங்கள்.
அமைச்சர் றிஷாதுக்குள்ள உணர்வு மேற்கூறிய எல்லா முஸ்லிம் தலைமைகளுக்கும் வரவேண்டும். அரசுக்கும், சுகபோகங்களுக்கும், அரசியலுக்கும் அடிபணிவதை விட அதிலிருந்து விலகி ஒரு பொதுமகனாக இருப்பது இஸ்லாத்தில் மேலானது என்பதனையே நேற்றய விவாத்திற்குப் பிறகான மக்களின் ஆதங்கங்களில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட பதிலாக வந்துள்ளது.

இலங்கை வாழ் முஸ்லிம்களை இந்த நாட்டில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்காக இரத்தவெறி பிடித்த இனவாத பௌத்த தேரர்கள் இன்று பொய்க்குமேல் பொய்களை ஊடகங்கள் வாயிலாக கொட்டுவதும், அதற்கு பல ஊடகங்கள் ஆதரவாக இருப்பதும் ஊடக தர்மங்களை கொச்சைப்படுத்துவதனால் சமாதான விரும்பிகளை ஊடகங்களில் இருந்து வேறாக்குவதற்கும் தற்போது ஊடகங்களை வெறுப்பதற்குமான நிலைமைகளும் கூட தோன்றியுள்ளது.
இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைகளில் இருந்து முழு முஸ்லிம் சமுகமும் விடுபட வேண்டுமானால் ஒருகை ஓசை போதாது பல கைகளின் ஓசைகளே தேவை அதன் மூலமே முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வும், விடிவும் கிட்டும் என்பதே யதார்த்தம்.

By

Related Post