Breaking
Tue. Mar 18th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கருத்திட்டத்துக்கமைய, யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், குருணாகல் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகைத்தொழில் ஆலைகளின் (Mini Garment) பயிற்சி ஆசிரியைகளுக்கான நியமனக்கடிதம், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகரும், அஇமகா வின் குருணாகல் மாவட்ட இளைஞர்  இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீனினால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.

குருணாகல் மாவட்ட அமைச்சரின் இணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் ரூபானந்த தசநாயக்க, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் (NEDA) குருணாகல் மாவட்டப் பொறுப்பதிகாரி நிலூக்கா மற்றும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் சன்ஜய அத்துகல உட்பட அரச அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

 

 

Related Post