Breaking
Thu. Jan 16th, 2025

குருநாகல் மாவட்டத்தின், கல்கமுவ தேர்தல் தொகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (12) இணைந்துகொண்டனர்.

ஐ.தே.க வின் கல்கமுவ தொகுதி வேட்பாளர் ஸாஜஹான், கல்கமுவ கூட்டுறவு சங்கத் தலைவரும், ஐ.தே.கவின் ஆதரவாளருமான ஜனாப் பதுருதீன் மற்றும் ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர்,  மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டனர்.

மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட ஆதரவாளர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மூலம், மக்கள் காங்கிரஸினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. கட்சி பேதங்களுக்கு அப்பால், மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி, சமூக அக்கறையுடன் செயற்படும் ஒரு கட்சியாக இருப்பதனாலேயே, நாம் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டோம்.

அத்துடன், குருநாகல் மாவட்டத்திலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மாகாணசபை பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையிலும், கல்கமுவ தேர்தல் தொகுதியை திறம்பட முன்னேற்றிச் செல்வதற்கும் அமைப்பாளர் என்.எம்.நஸீர் அவர்களுடன் இணைந்து செயற்பட எண்ணியுள்ளோம்.

மேலும், எமது சமூகத்துக்கான அனைத்து உரிமைகளும், சேவைகளும் கிடைக்க வேண்டும் என்று அயராது பாடுபடும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொள்வதில் நாங்கள் பெருமிதம் அடைகின்றோம்” என்று தெரிவித்தனர்.

இந் நிகழ்வில், குளியாப்பிட்டிய பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எம்.சி.இர்பான், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட செயலாளர் அன்பாஸ் அமால்தீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

(ன)

 

 

Related Post