Breaking
Thu. Dec 26th, 2024

-ஊடகப்பிரிவு- 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான அஸார்தீன் மொய்னுதீனின் வெற்றியானது குருநாகல் வாழ் சமூகத்தின் வெற்றியாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் தெரிவித்தார்.

அஸார்தீன் குருநாகல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை அறிமுகப்படுத்திய ஆரம்பகால உறுப்பினராக இருந்ததுடன், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளராகவும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகராகவும் இருப்பதுடன், மக்களுக்கான பல சேவைகளை மக்கள் காங்கிரஸ்  தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் எம்முடன் இணைந்து செய்துள்ளார்.

மேலும் மிகுந்த துடிதுடிப்பும், துணிச்சலும், ஆற்றலும் மிக்க ஒருவராகவே  நான் அவரைக் காண்கின்றேன். குருநாகல் நகரசபையை வெற்றிகொள்வதன் மூலம் இன்னும் பல வேலைத்திட்டங்களை சிறப்பாக மேற்கொள்வதற்கு, அவரின் வெற்றியை உறுதி செய்வது குருநாகல் வாழ் மக்களின் கடமையாகும் என அவர் கூறினார்.

Related Post