Breaking
Fri. Nov 22nd, 2024

வைரங்கள் போல் மின்னிடும் அதிசயங்கள் பலவற்றை வான்மறை நெடுகிலும் காண முடிகிறது. கண்டும் காணாமல். கண்டதை ஆராயாமல் அலட்சியப்படுத்தும் மனிதனின் அவல நிலையை கண்டு, எப்படித்தான் அவனால அலட்சியப்படுத்த முடிகிறது? என அல்லாஹ்வே தன் அருள் மறையில் வியப்போடு குறிப்பிடுகிறான்.

‘நமது அத்தாட்சிகளை கண்டும் (காணாமல்) அவர்கள் அலட்சியப்படுத்திச செல்கின்றனர். (அல்-குர்ஆன் 54:2) எனவே, நாம் படிப்பினை பெறவும்,நமது நமடபிக்கையை வலுப்படுத்தவும் நாம் குர்ஆனில் பளிச்சிடும் அதிசயங்களை தொடர்ந்து காண்போம்.

ஒருவன் தன் கண் எப்படி இருக்கிறது? அது எப்படி இயங்குகிறது? ஆதன் மூலம் பார்வை எப்படிக் கிடைக்கிறது? என்பதை ஆராய முற்படின் அவன் இறைவனை ஏற்க வேண்டியது வரும் என்றார் ஓர் அறிஞர்..

ஆம்!உண்மை தான்! மனித உறுப்புகளில் அவனது கண்கள் மிகவும் விந்தையானவை!. அற்புதமானவை! வுல்லானின் வல்லமையை உணர்த்துபவை!

ஆகவே தான் அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காகவும்,அதன் புதுமைகளை தெரிந்து கொள்வதற்காகவும் இறைவன் திருக்குர்ஆனில்,
‘ நாம் அவனுக்கு இரு கண்களை அமைக்கவில்லையா? ‘ (அல்-குர்ஆன் 90:2) எனக்கேட்டு அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காக நம் சிந்தையை தூண்டுகிறதது அருள்மறை அல குர்ஆன்.

இன்று விஞ்ஞானத்துறையில் மனிதன் வியத்தகு சாதனைகளைச் செய்தும் கூட கண்களின் இயல்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு போலிக் கண்ணை அமைக்க இன்னும் அவனால முடியவில்லை. இதற்காகவது அந்த வல்ல நாயனுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஐவேளை என்ன ? ஐயாயிரம் வேளைகள் வேண்டுமானாலும் தொழலாம்..

கருவில் வளரும் கண்களின் அதிசயம்

கருவில் வளரும் குழந்தையின கண்கள் இயல்பாக அமைவதே ஓர் அதிசயமாக உள்ளது. குழந்தை பிறப்பதற்கு பல வாரங்களுக்கு முன்பே குழந்தைக்கு கண்கள் உருவாகி வளர்ச்சியடையத் துவங்குகிறது. உடலின் மென்மையான அந்த உறுப்புகள், உடலின் மிக இன்றியமையாத அந்தப்பகுதி, மனிதனுக்கு உணர்வையும் விழிபபையும் வழங்கும் அந்த அவயவம் எங்கே உருவாக்கப்படுகிறது தெரியுமா ? இருளில் தான் உருவாக்கப்படுகிறது இறைவனின் இந்த அற்புத சக்தியை ஒருகணம் எண்ணிப்பாருங்கள்.

‘இமைகள்’ கண்களின் மாபெரும் கவசங்கள்

குழந்தை பிறக்கும் போது ஒளியைக் காணும் சக்தி அதன் கண்களுக்கு இருக்கின்றன. என்றாலும் அதன் கண்கள் முழுமை பெற்று விட்டதாகக் கூறுவதற் கில்லை.அதிக ஒளியையும் குறைந்த ஒளிஐயயும் காணும் போது அதற்கேற்ப கண்களை இயக்கும் சக்தி தானாகவே வந்து விடுகிறது. ஆபத்துகளிலிருந்தும், புழுதிகளிலிலிருந்தும் தற்காத்துக் கொள்வதற்கு ‘இமைகள்’ என்னும் மாபெரும் கவசங்களை பாதுகாப்பிற்காகப் படைத்திருப்பதும் அது மிகவேகமாக இயங்குவதும் விந்தையிலும் விந்தையல்லவா?

அதைப்படைத்த நாயன் நம்மைப்பார்த்து ‘நாம் அவனுக்கு இரு கண்களை அமைக்கவில்லையா? ‘ எனக் கேட்கும் கேள்வியும் நியாயமானதல்லவா?

By

Related Post