Breaking
Tue. Dec 24th, 2024
குர்தீஸ்தான், எர்பில் நாட்டின் இலங்கைக்கான கொன்சியூளர் டாக்டர் அஹமட் ஜலால் அவர்களை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சில் சந்தித்து, பேச்சு நடத்தினார்.
இரண்டு நாடுகளின் வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பொருளாதார விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். இலங்கையில்  கோழிப் பண்ணை வளர்ப்பு, சோளகத்தை அரைக்கும் இயந்திர ஏற்றுமதி தொடர்பில் டாக்டர் அஹமட் அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.
இலங்கை தொழிலாளர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என கூறிய டாக்டர் தமது நாட்டில் அவர்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குர்தீஸ்தானின் புதிய கொன்சியூளராக நியமிக்கப்பட்ட டாக்டர் அஹமட் அவர்களுக்கு அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு

Related Post