Breaking
Thu. Jan 16th, 2025

சவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

உலக சந்தையில் நிலவும் கேள்வியுடன் ஒப்பிடும் போது சமமான எரிபொருள் விநியோகம் காணப்படுவதாக சர்வதேச வலுசக்தி முகவர் நிறுவனம் முன்வைத்துள்ள கருத்துக்கு அமைய சவுதி அரேபியா எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை குறைப்பின்படி பிரன்டி மசகெண்ணை ஒரு கலன் 93 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது. 2012 ஜூன் மாதத்திற்குப் பின்னர் பதிவாகும் ஆதிகூடிய விலை குறைப்பு இதுவென கருதப்படுகிறது.

இதேவேளை, அமெரிக்காவின் லையிட் குரூட் எனப்படும் மசகெண்ணெய் 90 டொலராக குறைந்துள்ளது. சுமார் 17 மாதங்களுக்குப் பின்னர் இவ்வாறானதொரு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தமது கேள்வியை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கில் சவுதி அரேபியா எண்ணெய் விலையை குறைத்துள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஓரிரு நாட்கள் இருந்த நிலையில் பெற்றோல் ஒரு லீட்டர் 5 ரூபாவிலும் டீசல் லீட்டர் 3 ரூபாவிலும் மண்ணெண்னை லீட்டர் 20 ரூவாவிலும் குறைக்கப்பட்டது.

தற்போது உலக சந்தையில் மசகெண்ணை விலை பாரிய அளவில் குறைந்துள்ளதால் இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் குறைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

Related Post