குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சார இணைப்புக்களை பெற்றுக்கொள்ளுவதற்கு கடனுதவித் திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.எரிசக்தி மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமூவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்று இடம்பெறுகிறது.மஹிந்த சிந்தனை தேசிய வேலை திட்டத்தின் கீழ் சகருக்கும் மின்சாரம் என்ற இலக்கை நடைமுறைபடுத்தும் நோக்கில் இந்த கடன் திட்டம் இன்று செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் ஒருவர் 40,000 ரூபாவை கடனாக பெற முடியும்.இதன்படி சுமார் 47,000பேருக்கு கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன