Breaking
Thu. Nov 14th, 2024

ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளி­களை கைது செய்­யவே மக்கள் எமக்கு இரு­முறை ஆணை வழங்­கி­னார்கள். கடந்த ஒரு­வ­ருட கால­மாக நிதி மோசடி விசா­ரணை பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் யோஷித ராஜபக் ஷ குற்­ற­வா­ளி­யாக இனம்­கா­ணப்­பட்ட பின்­னரே அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

தோப்­பூரில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் யோஷித ராஜபக்ஷவின் கைது தொடர்­பாக கருத்­து­வெ­ளி­யிடும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அவர்,

கடந்த ஆட்­சியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல்கள், ஆட்­க­டத்­தல்கள், சொத்­து­கு­விப்பு போன்ற ஜன­நா­யக எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை இல்­லாமல் செய்து குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­ப­தாக கூறியே நாம் மக்­க­ளிடம் ஆணையை கோரியி­ருந்தோம். ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளி­களை கைது செய்­யவே மக்கள் எமக்கு இரு­முறை ஆணை வழங்­கி­னார்கள். கடந்த ஒரு­வ­ருட கால­மாக நிதி மோசடி விசா­ரணை பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் யோஷித ராஜபக் ஷ குற்­ற­வா­ளி­யாக இனம்­கா­ணப்­பட்ட பின்­னரே அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இக்­கைதை அர­சியல் பழி­வாங்­க­லாக சித்­த­ரிப்­ப­துக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் சில சுதந்­திர கட்சி அமைச்­சர்­களும் முயற்சிக்­கின்­றனர். இது அர­சியல் பழி வாங்கல் என்றால் தேர்தல் முடிந்த ஒரே நாளில் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா கைது செய்­யப்­பட்­டதும் முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சிராணி பண்­டா­ர­நா­யக்க பத­வி­நீக்கம் செய்­யப்­பட்­ட­தையும் எவ்­வாறு அழைப்­பது.

இன்று அர­சியல் பழி­வாங்கல் என்று கூக்குரலிடும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, சிராணி பண்டாரநாயக்கவுக்கு நடந்த அநீ­தி­க­ளின்­போது சிவப்பு சால்­வை­களால் கண்­களை மறைத்து கொண்­டி­ருந்­தனர்.

எமது அர­சாங்கம் அர­சியல் ரீதி­யாக பழி­வாங்க நினைத்­தி­ருப்பின் இன்று அர­சியல் பழி­வாங்கல் என கோஷம்­போடும் பலர் பாரா­ளு­மன்ற தேர்தல் முடிந்த உடனே வெலிக்­க­டைக்குள் தள்­ளப்­பட்­டி­ருப்பர். கைது செய்­யப்­பட முன் ஊழல்­வா­தி­களை இன்னும் ஏன் கைது செய்­யப்­ப­ட­வில்லை என கேள்வி எழுப்­பினர். கைது செய்தால் அர­சியல் பழி வாங்கல் என கூறு­கின்­றனர்.

எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் ஒன்றுசேர்த்து நிதி மோசடி பிரிவை மூடு­மாறு பெருந்­தொ­கை­யான தேங்­காய்­களை உடைத்­துள்­ளனர். இதற்­கான தேங்­காய்கள் அரச காணி ஒன்றில் இருந்து திரு­டப்­பட்­ட­தாக அறி­யக்­கி­டைத்­தது. திரு­டர்­களை காப்­பாற்ற திருட்டு தேங்காய் உடைக்­கி­றார்கள்.

இதை பணம் கொடுத்து வாங்­கினால் குரு­ணா­க­லி­லுள்ள தேங்காய் வியா­பா­ரி­க­ளுக்­கா­வது சிறிது இலாபம் கிடைக்கும். குரு­ணா­கலில் இருந்து அதி கூடிய விருப்பு வாக்­கு­களை பெற்று பாராளு­மன்­றத்தில் வாய்­மூடி இருப்­ப­வர்கள் இந்த உத­வி­யை­யா­வது அம்­மக்­க­ளுக்கு செய்­தி­ருக்­கலாம்.

ஊழல்­வா­தி­களும் கொலை­காரர்­களும் எவ்­வா­றான சதித் திட்­டங்கள் தீட்டினாலும் நல்லாட்சியின் பயணத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. நாம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதி களை நிறைவேற்றி வளமான அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்க ஜனாதிபதி, பிரதமரின் கீழ் மிகுந்த அர்ப்பணிப்புக்களுடன் செயற்படுகிறோம். இதன் பயனை விரைவில் மக்கள் அடைவார்கள் என்றார்.

By

Related Post