Breaking
Mon. Dec 23rd, 2024
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தம் நோக்கில் இலங்கையில் பாவனையில் உள்ள அனைத்து கைத்தொலைபேசிகளினதும் சிம் அட்டைகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அனைத்து தொலைபேசி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிம் அட்டையினைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகளை தடுப்பதே இதன் நோக்கமென இந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய நபர்களின் பெயர்களில் சிம் அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டு அது பல்வேறு குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் இந்த திட்டம் நடைமுறைபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் இந்தத் திட்டம் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

By

Related Post