நல்லாட்சியின் கீழ் குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவர் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் பொலிஸ்துறை பக்கசார்ப்பாக நடப்பதற்கு ஏதுக்கள் இல்லை.எனவே, குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில்ஆஜர்செய்யப்படுவார்கள்.
பொலிஸ்துறை தற்போது வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக குற்றம் செய்யும்வழிமுறைகள் தடுக்கப்படும்.
ஊழல் செய்தவர்கள் சிறைகளுக்கு நிச்சயம் செல்வார்கள். சட்டத்தின்படி அனைத்தும்முன்னெடுக்கப்படும்.
மற்றவர்களின் அட்டவணைப்படி வெள்ளைவேன், கறுப்பு வேன் மற்றும் சிவப்பு வேன் என்பனசெயற்படாது என்றும் பூஜித் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சமூகத்துடன் இணைந்த சேவை ஒன்றை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தநிலையில், இலங்கையில் பயங்கரவாதமோ அல்லது தீவிரவாதமோ இல்லை.பொலிஸாரை பொறுத்தவரையில்அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லவேண்டியதில்லை.
பொலிஸை பொறுத்தவரையில் இன்று அது பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றவே செயற்படுகிறதுஎன்றும் பூஜித் ஜெயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.