போலி ஆவணத்தை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என சட்டத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எந்த நபருக்காவது நஷ்டத்தை ஏற்படுத்தும் நோக்கில், மோசடி செய்யும் எண்ணத்தில் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டால் இந்த தண்டனை வழங்கப்படும் என சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
போலி ஆவணம் என்பது ஆவணத்தை முழுமையாக மாற்றுவது மாத்திரமல்ல, ஆவணத்தில் ஒரு பகுதியை மாற்றுவது, கையெழுத்திடுவது, மாற்றங்களை செய்வது போன்றவை, இலங்கையின் சட்டத்தின் கீழ் போலி ஆவணம் தயாரிக்கும் குற்றங்களில் அடங்கும்.போலி ஆவணத்தை தயாரித்து அதன் மூலம் ஏதேனும் மோசடியில் ஈடுபட்டிருந்தால், தண்டனை மேலும் அதிகரிக்கும்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் குற்றம் செய்த நபருக்கு 5 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையோ அல்லது சாதாரண சிறைத் தண்டனையோ வழங்கப்படலாம் எனவும் சட்டத்தரணி கூறியுள்ளார்