இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் சட்ட மா அதிபருக்குமே காணப்படுகின்றது என காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்ற செயல்கள் தொடர்பில் உயர் நீதிமன்ற நீதவான்கள் விசாரணை நடத்த உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடையாது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதவான்களை நியமிக்குமாறு நாம் கோரியுள்ளோம்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளை விடவும் ஓய்வு பெற்ற நீதவான்களே விசாரணைகளுக்கு பொருத்தமானவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்கள் விசாரணை நடத்துவதனை மக்கள் விரும்பவில்லை. சர்வதேச சட்டங்கள் தொடர்பில் ஐந்து வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டல்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
எனினும் இவர்கள் நேரடியாக விசாரணைகளில் ஈடுபடமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.