Breaking
Mon. Jan 13th, 2025
குளியாப்பிடிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான  அமீர் அலி அவர்களின் நிதியொதுக்கீட்டில், நன்னீர் மீன் வளர்ப்பு வேலைத்திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு, மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவருமான என்.எம்.நஸீரின் வேண்டுகோளுக்கினங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதித் தவிசாளர் எம்.சி. இர்பான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் மேற்பார்வையில் நேற்று (18) ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் வாரியப்பொல கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரி அன்வர் ஆகியோர் கலந்துகொண்டு குளங்களை பார்வையிட்டதுடன், நீரின் நிலை பற்றியும் ஆராய்ந்தனர்.

Related Post