Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் குளியாப்பிட்டிய பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று மாலை (23) ரஸீன் ஹாஜியாரின் இல்லத்தில்  இடம்பெற்றது.

இதன்போது, கெகுணுகொல்ல பிரதேசத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரஸ்லான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான டாக்டர்.ஷாபி சிஹாப்தீன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் எஸ்.எல்.நஸீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், குளியாப்பிட்டிய பிரதேசசபை தலைமை வேட்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.சி.இர்பான், பொல்கஹவெல பிரதேசசபை தலைமை வேட்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

 

Related Post