Breaking
Sun. Dec 29th, 2024

-ஊடகப்பிரிவு-

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்று (14) விசினவ, மடலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டதுடன், வேட்பாளர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விளக்கங்களையும் அளித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்கள்  என பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

 

Related Post