இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை மூச்சுத்திணறலால் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று (2) அதிகாலை வேளையில் அந்த குழந்தையின் மீது ஏராளமான எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. இதை கண்ட லட்சுமி உடனே அங்கிருந்த தாதிகளிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
எறும்புகளை தாதியர்கள் துடைத்தபோது குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த குளுக்கோஸ் போத்தல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
அடுத்த ½ மணி நேரத்தில் குறித்த குழந்தை இறந்ததை தொடர்ந்து எறும்புகள் கடித்ததாலும், குளுக்கோஸ் போத்தல் வீழ்ந்ததாலும் குழந்தை இறந்ததாக உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வைத்தியர்கள் மூச்சுத்திணறலாலேயே குழந்தை இறந்தது என்றனர்.