Breaking
Mon. Dec 23rd, 2024
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிடுகின்ற கருத்துக்களின் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னை காட்டிகொடுப்பதற்கு தன்னுடன் இருந்தவர்களே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியவைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தவறு செய்யாதவர் என்றால் எதற்கு காட்டிகொடுப்பிற்கு பயப்பட வேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுவரையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் அதிக முன்னேற்றத்தையடைந்துள்ளதனால் முன்னாள் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதென தான் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரேனும் மக்கள் பணத்தை சுரண்டினால், குற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எனவே மோசடி செய்து மக்கள் பணத்தை சுரண்டிய நபர்கள் சட்டத்தின் முன் செல்வதற்கு ஆயத்தமாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவலத்துவல மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post