Breaking
Mon. Dec 23rd, 2024

8ஆவது பாராளுமன்றத்தின்  குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை 8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் பிரதி சபாநாயகராக  திலங்க சுமதிபாலவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சபை அமர்வுகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post