Breaking
Tue. Dec 24th, 2024

Ø புத்தளம் மற்றும் பொத்துவில்லுக்கான தனியான கல்வி வலயங்கள்

Ø புத்தளத்திற்கான வயம்ப அமைச்சின் அபிவிருத்திகள்

Ø மௌலவி ஆசிரிய நியமனங்கள்…….உள்ளிட்ட கோரிக்கைகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
முதலில் இந்த பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சினதும்,மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சினதும் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற கிடைத்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அதே போல் வயம்ப அபிவிருத்திக்கான அமைச்சராக அனுபவமும்,நேர்மையும் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான கௌரவ எஸ்.பீ.நாவின்ன அவர்கள் நியமிக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என்பதை இந்த உரையின் ஆரம்பத்தில் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

அதே போல் கல்வி அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுள்ள அமைச்சர் அகில விராஜ் அவர்கள் மிக நேர்மையாக செயலாற்றுகின்றார். குறிப்பாக அதிபர்களது விடயத்தில் பரீட்சையினை வைத்தார். அதன் பிற்பாடு இந்த பரீட்சையில் சித்தியெய்தியவர்களுக்கு மிகவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர்களது நியமனங்களை வழங்கினார் .ஒரு சில மாகாண சபையினால் நியமனங்கள் வழங்கப்படுவதில் இன்னும் முரண்பாடுகள் காணப்படுவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என கேட்கின்றேன்.

சில அதிபர்கள் போட்டி பரீட்ல்லைசையில் தோற்றுவதற்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.அவர்கள் சிறந்த நிர்வாக திறமை கொண்டவர்கள். ஆனால் அவர்களது வயது அடிப்டையில் இந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.இதனால் அவர்கள் தமது சந்தர்ப்பத்தை இழந்து சாதாரண ஆசிரியர்களாக இருக்கின்றனர்.இது இவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகவே நாம் பார்க்கின்றோம்.இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே தங்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.அத்துடன் இது தொடர்பில் கல்வி அமைச்சர் கவனம் செலுத்தி அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.

குறிப்பாக சில பிரதேசங்களில் வலயக் கல்வி பணிமனையில் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கல்வி பிரிவு மற்றும்,தமிழ் கல்வி பிரிவுக்கான பிரதி கல்விப் பணிப்பாளர்கள் எவ்வித அதிகாரமுமின்றி இருக்கின்றனர்.இதனால் இவர்கள் நியமிக்கப்பட்டதன் நோக்கத்தை அடைந்து கொள்ளமுடியாதுள்ளது.இது இப்பாடசாலைகளின் அபிவிருத்தியில் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றது என்பதை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.எனவே அவர்களுக்கான அதிகாரங்களை வழங்கி அந்த பாடசாலைகளின் செயற்பாடடில் இயக்கம் காண நீங்கள் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

அதே போல் மௌலவி ஆசிரியர் நியமனம் என்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அவர்கள் ஒரு பரீட்சையினை நடத்தினார்.அதில் சில நியமனங்கள் வழங்கப்பட்டன. அதன் போது கூறப்பட்டது இது முதற்கட்டமாகும்,கட்டம் கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படும் என்று ஆனால் இதுவரைக்கும் அது வழங்கப்படவில்லை.பாடசாலைகளில் நுாற்றுக்கணக்கான மௌலவி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மதத்தை போதிக்க ஆசிரியர்கள் தேவை என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை.நான் குறிப்பாக மௌலவி ஆசிரியர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலேயே கல்வி அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ளேன்..எனவே அமைச்சர் அவர்களே,இந்த நியமனங்களை துரித கதியில் பெற்றுத்தர நீங்கள் ஆவணம்செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

அதே போல் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் கல்வி வலயத்தில் சுமார் 203 பாடசாலைகள் காணப்படுகின்றன.இந்த பாடசாலைகளின் அதிகரிப்பு நிர்வாக தாதமத்துக்கு தடையாக உள்ளது,இந்த கல்வி வலயத்தை புத்தளம் மற்றும் ஆனமடுவ கல்வி வலயங்களாக பிரித்து இந்த பணியினை மேற்கொள்ள இலகுவாக இருக்கும்,எனது அருகாமையில் அமர்ந்திருக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களின் வேண்டுகோளும் இதுவாகும் என்தாகவும் ஹன்சாட் பதிவில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அது மட்டுமல்ல அம்பாறையில் பொத்துவில்லுக்கான தனியான ஒரு கல்வி வலயத்தை உருவாக்கித்தருமாறு அப்பிரதேச மக்கள் எம்மிடம் முன் வைத்த கோறிக்கையினை தங்களது கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுவந்திருந்தேன்.இது தொடர்பில் நீங்கள் காட்டிய கரிசனைக்கு எமது நன்றிகளை தெரிவிதது கொள்ளவிரும்புகின்றேன்.அத்தோடு மட்டுமல்லாமல் இது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு குழுவொன்றினையும் நீங்கள் நியமித்துள்ளமையினை நாம் வரவேற்கின்றோம்.அத்தோடு அண்மைய பாடசாலைகள் வேலைத்திட்டம் மிகவும் பலனளிக்கும் ஒன்றாகவுள்ளது.அது போல் பாடசாலைகளுக்கு தேவையான மலசல கூட வசதிகள் தொடர்பில் கவனம்செலுத்தியுள்ளீர்கள.அத்தோடு கௌரவ பிரதம மந்திரியின் ஆலோசணைக்கமைய மடிக்கணணி வழங்கும் திட்டத்தையும் நீங்கள் நடை முறைக்கு அடுத்தவருடம் முதல் கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.இது பாராட்டுக்குரியது.

வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள மாணவர்கள் தமது கல்வி கற்றலில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.பாடசாலைக்கு போதிய வளங்கள் இன்மை ஒரு காரணமாகும்,எனவே கல்வி அமைச்சராகிய நீங்கள் வடமாகாண சபையுடன் இணைந்து அங்குள்ள பிரச்சினைகளை தீர்த்துதரவேண்டும்.அது போன்று தான் கிழக்கு மாகாணத்திலும் ,அதற்கு அப்பால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் உள்ள 900 ஆயிரத்துக்கும் அதிகமான பாடசாலைகளில் பல பிரச்சினைகள் உள்ளன அவற்றையும் நீங்கள் தீர்க்க வேண்டும்.

இன்று நிர்வாக சேவை,வெளிநாட்டு சேவை,திட்டமிடல் சேவை,கல்வி சேவை மற்றும் கணக்காளர் சேவைகளில் பார்க்கின்ற போது எமது சமூகத்தை சார்ந்தவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர்.3 சதவீதம்,ஆனால் சனத்தொகையில் 10 சதவீதமாக இஸ்லாமியர்கள் இருக்கின்றனர்.தங்களிடம் அன்பாக நான் வேண்டிக்கொள்வது அவர்களுககு கல்வியிலேயே உயர்த்தி அவர்களும் இந்த நாட்டில் ஏனைய சமூகங்களை போன்று உயர்ந்த கல்விச் சமூகமாக மாறுவதற்கு உங்களது இந்த அமைச்சுக் காலத்தில் ஆக்க பூர்வமான பங்களிப்பினை வழங்குவீர்கள் என நான் நம்புகின்நேன்.

குறிப்பாக கௌரவ அமைச்சர் நாவின்ன அவர்கள்,உங்களது அமைச்சின் கீழே புத்தளம் ,கல்பிட்டி,நுரைச்சோலை,புளிச்சாக்குளம் போன்ற பகுதிகளிளை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும்,அதே போல் நகர அபிவிருத்தியினை செய்ய திட்டம் வகுத்துள்ளதாக உங்களது அடுத்தவருட அபிவிருத்தி இலக்கு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.புத்தளம் தொகுதி என்பது ஒரு இலட்சம் வடபுல முஸ்லிம்களை தாங்கிய ஒரு தொகுதியாகும்.துன்பங்களை அனுபவித்த தொகுதி,பல தேவைகளை கொண்ட தொகுதி,கடந்த காலத்தில் நீங்கள் வடமேல் மாகாண முதலமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளை போன்று மேலும் நிறைய அபிவவிருத்திகளை இந்த மக்களுக்கு செய்ய வேண்டும் என அன்பாக உங்களிடம் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.

அதே போன்று குருநாகலயில் டக்டர் சாபி அவர்களும்,புத்தளத்தில் நவவி அவர்களையும் இந்த உங்களது அபிவிருத்தி பணிகளில் இணைத்துக்கொண்டு செல்லுமாறு தங்களை இந்த சபையில் வைத்து கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தமது சிறு வயதில் இவ்வாறானதொரு பாரிய பொறுப்புள்ள அமைச்சினை கொண்டு சிறந்த பணியாற்றிவருகின்றமைக்கு மீண்டும் ஒரு முறை எனது நன்றியினை தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

By

Related Post