அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குவான்டனாமோ தடுப்பு சிறையை மூடுவதற்கான நீண்ட கால திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
குவான்டனாமோ சிறை, அமெரிக்காவின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக ஒபாமா கூறியுள்ளார்.
இது கிளர்ச்சியாளர்கள் உருவாவதற்கான இடமாகவும் அது அமைந்துவிட்டதென சுட்டிக்காட்டிய அவர், அந்தப் பிரச்சினைகளை அடுத்த ஜனாதிபதியிடம் ஒப்படைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குவான்டனாமோ தடுப்புச் சிறையில் உள்ள கைதிகளை மற்ற இடங்களுக்கு மாற்றிவிடுவதற்கான திட்டத்தை ஒபாமா வெள்ளை மாளிகையில் வெளியிட்டுள்ளார்.
அந்த குவான்டனாமோ தடுப்பு சிறையை மூட கடந்த 8 ஆண்டுகளாக ஒபாமா முயற்சி செய்து வருகிறார். அதற்கு அமெரிக்க நாடாளுமன்றம், பாதுகாப்புத்துறை மற்றும் ஒபாமாவின் சொந்த கட்சியினரில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.