Breaking
Tue. Dec 24th, 2024
முன்னால் குவைத் பாராளுமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான ‘ஜாஸிம் கராபி’ அவர்களின் மறைந்த தந்தை ‘முஹம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி’ அவர்கள் நினைவாக வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் அல்-குர்ஆன் மனனப் போட்டியின் 18 ஆவது வருட பரிசளிப்பு விழா ஷாமியா பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது திவானியாவில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது .
இது குவைத்தில் அரபி ,அரபி அல்லாதவர்களுக்கு ஒன்றாகவே நடாத்தப்படும் தேசிய ரீதியிலாக மிகப் பெரிய போட்டியாகும்.இந்த வருடப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 2450 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் சிறார்கள் ,ஆண்கள் ,பெண்கள் மற்றும் விஷேட தேவை உடையவர்களுக்கான போட்டிகள் தனித் தனியே நடாத்தப்பட்டன .
இதில் முதலாம் ஜூஸ்உ மனனப் பிரிவில் மீயல்லையைச் சேர்ந்த ஹரீஸ் ஸாலிஹ் , ஸிமாயா ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் புதல்வன் ‘அப்துல் அஸீஸ் ஹரீஸ்’ சம முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார் . ஏனையவர்கள் அரபிகள் என்பது குறிப்பிடத்தக்கது
2013 ஆம் ஆண்டு இவர் அரை ஜூஸ்உ மனனப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார். 2014 ஆம் ஆண்டு இவரது மூத்த சகோதரர் ‘அப்துல்லாஹ் ஹரீஸ் ‘ முதலாம் ஜூஸ்உ மனனப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார் .
அதேபோல் கடந்த பல வருடங்களாக இவர்களும் ,இவர்களது தாயாரும் இன்னும் பல்வேறுபட்ட அல் -குர்ஆன்  மனன , ஓதல் போட்டிகளில் முதலாம் இடங்களை பெற்றுக் கொண்டு வருகிறார்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Related Post