குவைத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய 80 இலங்கை பணிப்பெண்கள் இன்று 18-04-2015 நாடு திரும்பியுள்ளனர்.
தற்காலிக கடவுச்சீட்டுகள் மூலம் அவர்களை நாட்டிற்கு அழைத்துவந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த பணிப்பெண்கள் குவைத்திற்கான இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
80 பணிப்பெண்களும் நாடு திரும்ப வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டது.
இதன்பின்னர் இந்தப் பெண்கள் பணிபுரிந்த இடங்களின் எஜமானர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தொழில் ஒப்பந்தங்கள் தொடர்பில் காணப்பட்ட சட்ட ரீதியான தடைகளை சமாளித்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர்களை நாட்டிற்கு அழைத்துவந்துள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்தது.